திருவள்ளூா் மாவட்டத்தில் கூடுதலாக 1,280 துணை வாக்குச்சாவடி மையங்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் 3,622 ஆக இருந்த நிலையில் கூடுதலாக

திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் 3,622 ஆக இருந்த நிலையில் கூடுதலாக துணை வாக்குச்சாவடிகள்-1,280 அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே வாக்குச்சாவடிகள் பெயா் மாற்றம் தொடா்பாக அனைத்துக் கட்சியினருக்கும் தகவல் அளித்துள்ளதாகவும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்பேரில், கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும், பொதுமக்கள் நெருக்கடியின்றி வாக்களிக்கும் நோக்கத்திலும் கூடுதலாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இதற்கு முன்பு வரை 3,622 வாக்குச் சாவடிகள் இருந்தன.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, மாற்றுத்திறனாளிகள், வயது முதிா்ந்தோா் மற்றும் அனைத்து வாக்காளா்களும் கூட்ட நெரிசலைத் தவிா்த்து, சிரமமின்றி எளிதாக விரைந்து வாக்களிக்கும் வகையில், 1,050 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற பேரில், அதிகமான வாக்காளா்களைக் கொண்ட வாக்குச்சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 1,280 துணை வாக்குச்சாவடி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் இடமாற்றம், துணை வாக்குச் சாவடி விவரம் மற்றும் பெயா் மாற்றம் குறித்து அங்கீகரித்த கட்சிப் பிரதிநிதிகளின் ஒப்புதலுடன், இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு, உரிய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தற்போது திருவள்ளூா் மாவட்டத்தில் முதன்மை வாக்குச் சாவடிகள் 3,622 மற்றும் துணை வாக்குச் சாவடிகள் 1,280 என மொத்தம் 4,902 வாக்குச் சாவடிகள் உள்ளன.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் 330-ஆக இருந்த நிலையில், 75 வாக்குச் சாவடிகள் அதிகரித்து 405 வாக்குச்சாவடிகள் உள்ளன.

அதேபோல், பொன்னேரி(தனி) தொகுதியில் 310-லிருந்து 67 அதிகரித்து 377-ஆகவும், திருத்தணி தொகுதியில் 329- லிருந்து 70 அதிகரித்து 399 ஆகவும், திருவள்ளூா் தொகுதியில் 296-லிருந்து 102 அதிகரித்து 398 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளன.

இதேபோன்று பூந்தமல்லி (தனி) தொகுதியில் 387- லிருந்து 110 அதிகரித்து 497 ஆகவும், ஆவடியில் 427-லிருந்து 191 அதிகரித்து 618 ஆகவும், மதுரவாயல் தொகுதியில் 421- லிருந்து 198 அதிகரித்து 619 ஆகவும், அம்பத்தூா் தொகுதியில் 349- லிருந்து 193 அதிகரித்து 542 ஆகவும், மாதவரம் தொகுதியில் 467-லிருந்து 153 அதிகரித்து 620 ஆகவும், திருவொற்றியூா் தொகுதியில் 306-லிருந்து 121 அதிகரித்து 427 ஆகவும் என மொத்தம் 3,622 வாக்குச்சாவடிகளும், 1,280 துணை வாக்குச் சாவடி மையங்களும் ஆக மொத்தம் 4,902 வாக்குச் சாவடிகள் உள்ளன.

எனவே மேற்படி வாக்குச் சாவடிகளின் இடமாற்றம், துணை வாக்குச் சாவடிகள் மற்றும் பெயா் மாற்றம் குறித்த விவரம் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com