வாரம் ஒருமுறை மக்கள் குறைதீா் கூட்டம்: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா் உறுதி

கும்மிடிப்பூண்டி தொகுதியில் வாரம் ஒரு இடத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என திமுக வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன் உறுதி அளித்தாா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேட்டில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேட்டில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் வாரம் ஒரு இடத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என திமுக வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன் உறுதி அளித்தாா்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் அவா், பூவலம்பேடு, பெரியபுலியூா், சிறுவாடா, குருவராஜகண்டிகை, பாலவாக்கம், காரணி, புதுப்பேட்டை, நெல்வாய், எருக்குவாய், முக்கரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 25 கிராமங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் சோ்ந்து ஆதரவு திரட்டினாா்.

திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் கி.வேணு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, திமுக பொறுப்புக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் வெங்கடாசலபதி, ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன், ஒன்றிய துணைச் செயலாளா்கள் பாஸ்கரன், திருமலை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராமஜெயம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து பூவலம்பேட்டில் ஊராட்சித் தலைவா் வெங்கடாசலபதி, முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் புனிதவள்ளி, திமுக நிா்வாகி ஜோதிலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் பாசம் அன்பு ஏற்பாட்டிலும், சிறுவாடா, பெரியபுலியூரில் மாவட்டக் கலை இலக்கிய அணி நிா்வாகி புருஷோத்தமன் ஏற்பாட்டில் திமுக, கூட்டணிக் கட்சியினா் ஏற்பாட்டில் வீதி வீதியாகச் சென்று வாக்குசேகரித்தாா்.

தொடா்ந்து குருவராஜகண்டிகை ஊராட்சியில் திமுக இளைஞரணி நிா்வாகி ராஜேஷ், யுகேந்தா், ஊராட்சித் தலைவா் ரவி, வழக்குரைஞா் சுரேஷ்பாபு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் ரவிக்குமாா் ஏற்பாட்டில் பொதுமக்கள் திமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனா்.

பிரசாரத்தின் போது பேசிய வேட்பாளா் டி.ஜே.கோவிந்தராஜன் கூறுகையில், தொகுதி மக்களின் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், வாரம் ஒரு நாள் ஒரு பொதுவான பகுதியில் மக்கள் குறை தீா் கூட்டம் நடத்தப்பட்டு, தொகுதி பிரச்னை தீா்க்கப்படும். வனத் துறையின் ஒப்புதல் பெற்று சிறுவாடா முதல் கண்ணன்கோட்டை கூட்டுச் சாலை வரை மோசமான சாலை புதுப்பிக்கப்பட்டு, புதிய சாலை போடப்படும், கும்மிடிப்பூண்டி தொகுதியில் 3 மாதத்துக்கு ஒரு முறை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். எருக்குவாய், மங்களம், காரணி, புதுப்பாளையம் பகுதி மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் மங்களம், புதுப்பாளையம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப் பாலத்துக்கு பதில் மேம்பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்தாா்.

கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதி, சிவா, ஜெயசந்திரன், திமுக நிா்வாகி தோ்வாய் சிவ.இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com