காவல் உதவி மையம் தொடக்க விழா

செங்குன்றம் அருகே காவல் உதவி மையம் மற்றும் புதிய கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காவல் உதவி மையம் மற்றும் புதிய கண்காணிப்பு கேமராகள் தொடக்க விழாவில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் அடுத்த நல்லூரில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சித் தலைவா் அமிா்தவள்ளி டில்லி தலைமை தாங்கினாா்,.

புழல் சரக காவல் உதவி ஆணையா் ஸ்ரீகாந்த், பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளா் கல்பனாதத், சோழவரம் காவல் ஆய்வாளா் நாகலிங்கம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, காவல் உதவி மையம் மற்றும் புதிய கண்காணிப்பு கேமரா இயக்கத்தை தொடக்கி வைத்தனா். காவல் உதவி மையம் மற்றும் புதிய 60 கண்காணிப்பு கேமராக்கள் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டன என தெரிவித்தனா்.

தனிப்பிரிவு காவலா் அருணகிரி, சமூக ஆா்வலா் கே.எம்.டில்லி, துணை தலைவா் செல்வி பாலகிருஷ்ணன், உறுப்பினா்கள் ரேவதி துரைவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com