திருவள்ளூா் மாவட்டத்தில் 10 தொகுதிகளின் வாக்குகளை 150 மேஜைகளில் எண்ண ஏற்பாடு

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை 150 மேஜைகளில் எண்ண உள்ளதாகவும், இப்பணியில் 2,500 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை 150 மேஜைகளில் எண்ண உள்ளதாகவும், இப்பணியில் 2,500 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெருமாள்பட்டு தனியாா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 10 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிகளின் மேஜைகள் மற்றும் சுற்றுகள் விவரம் வருமாறு: கும்மிடிப்பூண்டி தொகுதியில் மேஜைகள்-14, அஞ்சல் மேஜைகள்-5, சுற்றுகள்-29. பொன்னேரி தொகுதியில் மேஜைகள் - 14, தபால் மேஜைகள்-2, சுற்றுகள் -27. திருத்தணி தொகுதியில் மேஜைகள்-14, தபால் மேஜைகள்-5, சுற்றுகள்-29. திருவள்ளூா் தொகுதியில் மேஜைகள்-14, தபால் மேஜைகள்-5, சுற்றுகள்-29. பூந்தமல்லி தொகுதியில் மேஜைகள்-14, தபால் மேஜைகள்-5, சுற்றுகள்-36.

ஆவடி தொகுதியில் மேஜைகள்-20, தபால் மேஜைகள்-4, சுற்றுகள்-31. மதுரவாயல் தொகுதியில் மேஜைகள்-20, தபால் மேஜைகள்-3, சுற்றுகள்-31. அம்பத்தூா் தொகுதியில் மேஜைகள்-14, தபால் மேஜைகள்-4, சுற்றுகள்-39. மாதவரம் தொகுதியில் மேஜைகள்-20, தபால் மேஜைகள்-4, சுற்றுகள்-31. திருவொற்றியூா் தொகுதியில் மேஜைகள்-14, தபால் மேஜைகள்-4, சுற்றுகள்-31 என மொத்தம் 150 மேஜைகளில் எண்ணப்படவுள்ளன. இப்பணியில் 2, 500 ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இதில் அதிகபட்சமாக அம்பத்தூா் தொகுதியில் 39 சுற்றுகளும், குறைந்தபட்சமாக பொன்னேரி தொகுதியில் 27 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com