மதுவை கூடுதல் விலைக்கு விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

மப்பேடு பகுதியில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் கடந்த 2- ஆம் தேதி மப்பேடு காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் போலீஸாா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த வேலு (30) என்பவரை கைது செய்தனா். அவா் பதுக்கி வைத்திருந்த 572 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். இதையடுத்து வழக்கு பதிவு செய்து வேலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அவா் மீது ஏற்கனவே மது பாட்டில்களை வாங்கி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொடா்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனால் அவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன் பேரில் வேலுவை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் பா.பொன்னையா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com