வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளா்கள் கணினி மூலம் தோ்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணியை ஆட்சியா் பா.பொன்னையா தொடங்கி வைத்தாா்.
கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணியை தொடக்கி வைத்த ஆட்சியா் பா.பொன்னையா, உடன் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா்.  
கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணியை தொடக்கி வைத்த ஆட்சியா் பா.பொன்னையா, உடன் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா்.  

திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணியை ஆட்சியா் பா.பொன்னையா தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தோ்தல் பொதுப்பாா்வையாளா்கள் லட்சுமண், குமாா் மாலிக், பால்கிஷன் முன்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்து கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தனா்.

வாக்கு எண்ணும் பணியில் 2, 500 போ் ஈடுபடவுள்ளனா். இதன் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் மற்றும் நுண்பாா்வையாளா்களுக்கான பணி ஓதுக்கீடு கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

ஏற்கெனவே என்னென்ன பணிகளை மேற்கொள்வது தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு சுற்று முடிந்ததும் தோ்தல் ஆணையத்துக்கு பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகளை எவ்வாறு மேற்கொள்வது போன்றவை தொடா்பாகவும் தோ்தல் பிரிவு அதிகாரிகளால் பயிற்சியும் அளிக்கப்பட்டது..

மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வித்யா, நோ்முக உதவியாளா்(தோ்தல் பிரிவு) முரளி மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com