திருவள்ளூரில் திமுக வெற்றி

திருவள்ளூா் தொகுதியில் திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் 22,701 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
திருவள்ளூா் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரனுக்கு சான்றிதழை வழங்கிய தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மதுசூதனன்.

திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அரசியல் கட்சியினா், சுயேட்சைகள் என மொத்தம் 12 போட்டியிட்டனா். இதில் தற்போதைய திமுக எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனும், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணாவும் போட்டியிட்டனா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம்:

திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன்- 1,07,709 வாக்குகள். இவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா-85008 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி பசுபதி-15,028, பகுஜன் சமாஜ் வேட்பாளா் தாஸ்-2,329 வாக்குகளும் பெற்றனா். நோட்டா-1,872 வாக்குகள் கிடைத்தது. செல்லாத வாக்குகள்-146 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com