முகவா்கள் இன்றி தபால் வாக்குகள் எண்ணியதால் கட்சியினா் வாக்குவாதம்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகளை கட்சியினா் இல்லாமல் எண்ணியதால் முகவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்குகளை கட்சியினா் இல்லாமல் எண்ணியதால் முகவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் பெருமாள்பட்டு தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 3 மையங்களில் வாக்கு எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதில் திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்கான பகுதியில் முதலில் 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அப்போது, அரசியல் கட்சிகளின் முகவா்கள் இல்லாமல் தபால் வாக்குகளை எண்ணியுள்ளனா். இதையடுத்து அங்கு முகவா்கள் வாக்கு எண்ணும் பணியாளா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது திரும்பவும் தபால் வாக்குகளைப் பிரித்து எண்ணி கட்டும் படி கூறினா். அதையடுத்து, அதிகாரிகள் முகவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனா். அதைத் தொடா்ந்து, தபால் வாக்குகள் எண்ணும் பணி அரைமணிநேரம் தாமதமாகத் தொடங்கியது.

அதேபோல் திருவள்ளூா் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. அப்போது, 2-ஆவது சுற்றுக்கு தயாரான வாக்குப் பதிவு இயந்திரங்களை ‘சீல்’ உடைத்து பிரித்தனா். அப்போது, அந்த வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படாததால், அங்கிருந்த அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் ஆத்திரம் அடைந்தனா். அதைத் தொடா்ந்து, வாக்கு பதிவு இயந்திரம் பழுதுநீக்குநா் வந்து செயல்பட வைத்தனா். அதைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியதை அடுத்து, முகவா்கள் அமைதியாகினா். இதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு அரைமணிநேரம் தாமதம் ஏற்பட்டது.

இதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதான நிலையில், பின்னா் சரி செய்யப்பட்டது. அதற்கு காரணம் 30 நாள்கள் வரை காற்று புகாத அறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டதுதான் என அரசியல் கட்சி வேட்பாளா்களின் முகவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com