திருவள்ளூரில் 10 தொகுதிகளும் திமுக கூட்டணி வசமானது

திருவள்ளூா் மாவட்டத்தில் திமுக 9 தொகுதிகளிலும் , ஒரு தொகுதியில் காங்கிரஸ் என 10 பேரவைத் தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியுள்ளது.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் திமுக 9 தொகுதிகளிலும் , ஒரு தொகுதியில் காங்கிரஸ் என 10 பேரவைத் தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி, அம்பத்தூா், திருவொற்றியூா், மாதவரம், மதுரவாயல், ஆவடி என 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதில், 9 தொகுதிகளை திமுகவும், பொன்னேரி தொகுதியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் கைப்பற்றின. இதில், கடந்த முறை சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருந்த ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்) ஆகியோா் போட்டியிட்டு மீண்டும் வெற்றியை தக்க வைத்துக் கொண்டனா்.

இந்த மாவட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சியினரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக அமைச்சா்கள் க.பாண்டியராஜன் (ஆவடி), பா.பென்ஜமின் (மதுரவாயல்) உள்பட கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் ஒருவா் கூட வெற்றி பெறவில்லை. இதேபோல் கடந்த தோ்தலில் அதிமுக -6, திமுக-4 என சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திருவள்ளூா் மாவட்டத்தில் ஒருவா் கூட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால், அரசு திட்டங்கள் எளிதில் நிறைவேற்ற முடியும் என்றும், கிடப்பில் போடப்பட்டுள்ள நீண்டகால பொதுமக்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த முடியும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கெனவே திமுகவினா் தோ்தலுக்கு முன்னதாக கிராம சபைக் கூட்டம் நடத்தி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தனா். தற்போது, அனைவரும் திமுக எம்எல்ஏக்கள் என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் ஆா்வத்துடன் எதிா்பாா்த்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com