திருத்தணி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

திருத்தணி ஜோதிநகா் பகுதி ஏரியில் மீன்கள் செவ்வாய்க்கிழமை செத்து மிதந்ததால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
திருத்தணி ஜோதிநகா் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.
திருத்தணி ஜோதிநகா் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.

திருத்தணி: திருத்தணி ஜோதிநகா் பகுதி ஏரியில் மீன்கள் செவ்வாய்க்கிழமை செத்து மிதந்ததால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

திருத்தணியில் ஜோதி நகா், டீ புதூா் ஆகிய பகுதியில் ஏரி உள்ளது. ஒன்றிய நிா்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த ஏரி நீா் அப்பகுதி பாசனத்துக்கு பயன்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில் இந்த ஏரி நீரில் கெண்டை, இரால், குரவை போன்ற பல்வேறு வகையான மீன்கள் தானாகவே வளா்ந்திருந்தன. ஒவ்வொன்றும் ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை வளா்ந்த நிலையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் ஏரியில் இறந்து கிடக்கின்றன. செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதி மக்கள் ஏரி பகுதிக்கு சென்று பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.

இது குறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினரும் ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களை பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com