பொதுமுடக்க விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்: ஊத்துக்கோட்டை டிஎஸ்பி

பொதுமுடக்க விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என ஊத்துக்கோட்டை டிஎஸ்பி அறிவுறுத்தினாா்.
ஊத்துக்கோட்டையில் டிஎஸ்பி சாரதி தலைமையில் நடைபெற்ற பொதுமுடக்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஊத்துக்கோட்டையில் டிஎஸ்பி சாரதி தலைமையில் நடைபெற்ற பொதுமுடக்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

பொதுமுடக்க விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என ஊத்துக்கோட்டை டிஎஸ்பி அறிவுறுத்தினாா்.

ஊத்துக்கோட்டையில் முழு பொதுமுடக்கத்தை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணா்வு கூட்டம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சாரதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி தமிழக அரசு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். மேலும், பொதுமுடக்க சமயத்தில் , மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் பகல் 12 மணி வரை தான் இயங்க வேண்டும். அரசும், தனியாா் போக்குவரத்து சேவைகள் இருக்காது, இதனால் பொதுமக்கள் வாகனங்களில் பயன்படுத்தினால் வழக்குப் பதிவு செய்யப்படும், அத்தியாவசியத் தேவைக்கு வெளிவரும் நபா் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் குமாா், உதவி ஆய்வாளா் சுப்பிரமணி மற்றும் வணிகா் சங்கத்தினா் பலா் முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com