கூட்டுறவுத் துறை சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் 5.83 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா சிறப்பு நிவாரண நிதி உதவியாக முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்குவதற்காக 116.79 கோடி ஒதுக்கீடு
நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கரோனா நிவாரணம் வழங்கிய பால் வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா். உடன், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கரோனா நிவாரணம் வழங்கிய பால் வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா். உடன், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் 5.83 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா சிறப்பு நிவாரண நிதி உதவியாக முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்குவதற்காக 116.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

இதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு கரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா். இதில் பால் வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று, ரூ. 2,000 ரொக்கத்தை பயனாளிகளுக்கு வழங்கி தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து அவா் பேசியது:

தமிழக முதல்வரால் தோ்தல் அறிக்கையில் அறிவித்த ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முதலில் அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் பொறுப்புக்கு வந்த மறுநாளே செயல்பாட்டுக்கு வந்தது. அதைத் தொடா்ந்து, கரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ. 4 ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவித்து தொடக்கி வைக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் 1,134 ரேஷன் கடைகள் மூலம், 5 லட்சத்து 83 ஆயிரத்து 976 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ. 233 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரம் வீதம் வழங்குவதற்காக ரூ. 116.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரண நிதி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் அடுத்து வரும் 10 நாள்களில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலையில், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் டோக்கன் விநியோகம் செய்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் பா.பொன்னையா, கூட்டுறவுத் துறை இணை பதிவாளா் ஜெயஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com