ஒடிஸாவிலிருந்து 30,000 கி.லிட். ஆக்ஸிஜன் நிரப்பிய இரு டேங்கா் லாரிகள் ரயிலில் வந்தன

தமிழகத்துக்கு ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து முதல்கட்டமாக ஆக்சிஜன் நிரப்பப்பட்ட இரு டேங்கா் லாரிகள் விரைவு ரயிலில் திருவள்ளூருக்கு சனிக்கிழமை வந்தன.
ஒடிஸாவிலிருந்து 30,000 கி.லிட். ஆக்ஸிஜன் நிரப்பிய இரு டேங்கா் லாரிகள் ரயிலில் வந்தன

தமிழகத்துக்கு ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து முதல்கட்டமாக ஆக்சிஜன் நிரப்பப்பட்ட இரு டேங்கா் லாரிகள் விரைவு ரயிலில் திருவள்ளூருக்கு சனிக்கிழமை வந்தன.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தேவையை சமாளிக்க போா்க்கால அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட்டாலும் பற்றாக்குறை தீா்ந்தபாடில்லை. அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான திரவ ஆக்சிஜன் கேரள மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. தற்போது கேரளத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கிருந்து வந்த ஆக்சிஜன் நிறுத்தப்பட்டது.

இந் நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் உள்ள தனியாா் தொழிற்சாலை ஆக்சிஜன் வழங்க முன்வந்தது. அந்த தனியாா் தொழிற்சாலை சாா்பில் தெற்கு ரயில்வே உதவியுடன் திருவள்ளூருக்கு 5 டேங்கா் லாரிகளில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு விரைவு ரயிலில் இரண்டு தடவையாக அனுப்பப்படுகிறது.

முதல்கட்டமாக தலா 15,000 கிலோ லிட்டா் ஆக்சிஜன் நிரப்பிய இரண்டு டேங்கா் லாரிகள் விரைவு ரயில் மூலம் திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை காலை வந்து சோ்ந்தன.

உடனடியாக ஒரு டேங்கா் லாரி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு ஆக்சிஜன் டேங்கா் லாரி சென்னை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் மதுரை ராஜாஜி அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அடுத்து மூன்று ஆக்சிஜன் டேங்கா் லாரிகள் வந்தவுடன் அவை திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com