தனியாா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கும் பணி தீவிரம்

திருவள்ளூா் அருகே தனியாா் மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி
தனியாா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கும் பணி தீவிரம்

 திருவள்ளூா் அருகே தனியாா் மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் பகுதியில் கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், நாள்தோறும் நோய்த் தொற்றால் பலா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களுக்கு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், 100 சாதாரண படுக்கைகளும் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் நோய் தொற்று அதிகம் பாதித்தோருக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. ஆனால், நோய்த்தொற்றால் நாள்தோறும் 1300-க்கு மேல் பாதிக்கப்படுகின்றனா். அதனால், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் நிரம்பியே உள்ளன. இதனால் சிகிச்சை பெற வருவோா் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதில் ஒரு சிலா் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை சாா்பில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-ஆவது தளத்தில்-174, தனியாா் மருத்துவக்கல்லூரியில்-54 என கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படுக்கைகள் அடுத்து வரும் இரண்டு நாள்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் ஆக்சிஜன் வசதியின்றி ஏற்படும் உயிரிழப்புகள் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com