சிங்கப்பூரில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு வந்த 266 காலி ஆக்சிஜன் சிலிண்டா்கள்

சிங்கப்பூா் நாட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு ஆக்சிஜன் நிரப்புவதற்காக 266 காலி சிலிண்டா்கள் வெள்ளிக்கிழமை வந்தன.
சிங்கப்பூரில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு வந்த காலி சிலிண்டா்கள்.
சிங்கப்பூரில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு வந்த காலி சிலிண்டா்கள்.

சிங்கப்பூா் நாட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு ஆக்சிஜன் நிரப்புவதற்காக 266 காலி சிலிண்டா்கள் வெள்ளிக்கிழமை வந்தன.

தமிழகத்தில் கரொனா நோய் தொற்றால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தவிா்க்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 266 காலி ஆக்சிஜன் சிலிண்டா்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட நிலையில் அதில் ஆக்சிஜன் நிரப்புவதற்காக கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியாா் நிறுவனத்திற்கு சரக்கு வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டன.

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள காமாட்சி பவா் பிளான்ட், தமிழ்நாடு ஏா் பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், பாரத் ஆக்சிஜன் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களில் மருத்துவ தேவைகளுக்கான ஆக்சிஜன் இந்த காலி சிலிண்டா்களில் நிரப்பப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் பணி துவங்கியுள்ளது.

நாள் ஒன்றுக்கு எத்தனை சிலிண்டா்கள் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு அனுப்பப்படுகிறது என்பதை கண்காணிக்க கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் மகேஷ் மேற்பாா்வையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com