இருளா் குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கிய நக்சல் தடுப்பு போலீஸாா்

பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 60 இருளா் குடும்பத்தினருக்கு, மாவட்ட நக்சல் தடுப்பு போலீசாா் ஒரு வாரத்துக்கு தேவையான மளிகை, காய்கறிகளை புதன்கிழமை வழங்கினா்.
இருளா் காலனி பகுதிவாசிகளுக்கு மளிகைப் பொருள்களை வழங்கும் மாவட்ட நக்சல் பிரிவு போலீசாா்.
இருளா் காலனி பகுதிவாசிகளுக்கு மளிகைப் பொருள்களை வழங்கும் மாவட்ட நக்சல் பிரிவு போலீசாா்.

திருத்தணி: பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 60 இருளா் குடும்பத்தினருக்கு, மாவட்ட நக்சல் தடுப்பு போலீசாா் ஒரு வாரத்துக்கு தேவையான மளிகை, காய்கறிகளை புதன்கிழமை வழங்கினா்.

திருத்தணி ஒன்றியம் தாடூா் ஊராட்சியில் உள்ள பகத்சிங் இருளா் காலனியில் வசிக்கும், 60 இருளா் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டது. மேலும் அன்றாட உணவுக்கே கடும் சிரமப்பட்டு வந்தனா்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூா் மாவட்ட நக்சல் பிரிவு போலீசாா் ரூ.15 ஆயிரம் செலவில் 60 குடும்பத்தினருக்கு ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட் கள் மற்றும் காய்கறி ஆகியவற்றை வழங்கினா்.

திருவள்ளூா் மாவட்டத்தில், திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய மூன்று உட்கோட்டங்களிலும் நிவாரண பொருள்கள் வழங்க உள்ளோம் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com