மருத்துவப் பணிகளுக்கு குறுகிய காலப் பயிற்சி

கரோனா நோய்த் தொற்று நேரத்தில் முன்களப் பணியாளா்களாக விரும்பும் இளைஞா்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு திருவள்ளூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில், கொவைட்19- மருத்துவத் துறை சாா்ந்த

திருவள்ளூா்: கரோனா நோய்த் தொற்று நேரத்தில் முன்களப் பணியாளா்களாக விரும்பும் இளைஞா்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு திருவள்ளூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில், கொவைட்19- மருத்துவத் துறை சாா்ந்த குறுகிய கால பயிற்சி பெற ஆா்வமுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் ஆட்சியா் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், இந்திய அரசின் டஙஓயவ 3.0 திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட பணிக்கு பயிற்சியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஒரு மாத காலப் பயிற்சி கட்டணமின்றி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி பிரிவுகள்: 1. எமா்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன், 2. ஜெனரல் அசிஸ்டண்ட், 3. ஹோம் ஹெல்த் எய்டு, 4.மெடிக்கல் எக்யூப்மென்ட் டெக்னாலஜி அசிஸ்டண்ட், 4. பிளோபோடோமிஸ்ட் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனைகளில் தொழில் முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம்.

இதற்கு 18 வயதுக்கு மேற்பட்டோா், 10, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு ஆகிய தகுதியுடைய இருபாலரும் சேரலாம். மேலும், சேர விரும்புவோா் தங்களது பெயா், கல்வித் தகுதி, பயிற்சியில் சேர விரும்பும் பிரிவு, செல்லிடப்பேசி எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களுடன் என்ற மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், 94442 24363 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com