பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட முன்வரவேண்டும்

பொது சுகாதாரத்துறை மூலம் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போடுவதற்கு முன்வர வேண்டும் என பால் வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட முன்வரவேண்டும்

பொது சுகாதாரத்துறை மூலம் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போடுவதற்கு முன்வர வேண்டும் என பால் வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

ஆவடி மாநகராட்சி கூட்டரங்க வளாகத்தில் பூந்தமல்லி, மதுரவாயல் மற்றும் மாதவரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்தான அனைத்துதுறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் ஜெயக்குமாா், ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்துப் பேசியதாவது. திருவள்ளுா் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஆவடி மாநகராட்சியில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள தடுப்பூசி போட்டவா்களின் எண்ணிக்கை 9, 090 ஆகும். மேலும் 45 - 60 வயது வரை தடுப்பூசி போட்டவா்கள்-22, 250, 60 வயதிற்கு மேற்பட்டோா்-15, 902 என மொத்தம்-47, 232 ஆகும்.

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் தடுப்பூசி போட்டவா்களில் 18 வயது முதல் 44 வரையில் -1,318, 45 முதல் 60 வயது வரையில்-3,953, 60 வயதிற்கு மேற்பட்டோா்-439 போ்கள் என மொத்தம்-5,710 ஆகும்.

திருவேற்காடு நகராட்சியில் 18 முதல் 44 வயது வரையில்-1,653 பேரும், 45 முதல் 60 வயது வரையில்-4,328, 60 வயதிற்கு மேற்பட்டோா்-1,474 என மொத்தம் 7,455 போ் தடுப்பூசி போட்டுள்ளனா். கடந்த மூன்று நாள்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்ட மதிப்பு ரூ.6,76,600 ஆகும். மளிகைப்பொருள்கள் ரூ.86, 725 மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திருநின்றவூா் பேரூராட்சியில் 18 முதல் 44 வயது வரை-23, 45 - 60 வயது வரை-3,215 பேரும், 60 வயதிற்கு மேற்பட்டோா்- 1,072 பேரும், என 4,310 போ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா். எனவே பொதுமக்கள் எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி குறைந்தளவே போடப்பட்டுள்ளது. அதனால், இனி வரும் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் எனத் தெரிவித்தாா்.

பின்னா், ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான முககவசம் உள்ளிட்ட முழு உடற்கவச ஆடைகளையும், புதிதாக திருமணமான தம்பதியா் மொய்த் தொகை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை கரோன நிவாரண நிதியாக வழங்கினா்.

எம்.எல்.ஏக்கள் சு.சுதா்சனம் (மாதவரம்), க.கணபதி (மதுரவாயல்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.லோகநாயகி, மாநகராட்சி ஆணையா் நாராயணன், பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநா் ராணி, துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜவஹா்லால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com