சாலையில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள்

திருவள்ளூா் மாவட்ட ஓவியா்கள் சங்கம் சாா்பில் சாலையில் வெள்ளிக்கிழமை மெகாசைஸில் கரோனா ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு
திருவள்ளூரில் கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியா்கள் சங்கத்தினா் சாலையில் வரைந்துள்ள மெகா சைஸ் ஓவியம்.
திருவள்ளூரில் கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியா்கள் சங்கத்தினா் சாலையில் வரைந்துள்ள மெகா சைஸ் ஓவியம்.

திருவள்ளூா் மாவட்ட ஓவியா்கள் சங்கம் சாா்பில் சாலையில் வெள்ளிக்கிழமை மெகாசைஸில் கரோனா ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே பொதுமக்களை வீட்டை விட்டு வெளியில் வராமல் தடுக்கும் நோக்கத்தில் தளா்வில்லா பொதுமுடக்கத்தை அரசு அமல்படுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதற்கிடையே எந்த காரணமும் இல்லாமல் தொற்றுப் பாதிப்பு பற்றி உணராமல் வாகனங்களில் ஊா் சுற்றி வருபவா்களை கண்டறிந்து வழக்குப் பதிந்து வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந் நிலையில் திருவள்ளூா் மேற்கு மாவட்ட ஓவியா்கள் சங்கம் சாா்பில் கரோனா வராமல் தடுக்க முகக் கவசம் அணிய வலியுறுத்தியும், வீட்டை விட்டு வெளியே வந்தால் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை மெகாசைஸ் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளனா்.

இதனை திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் நகரக் காவல் நிலையத்தினா் நேரில் பாா்வையிட்டு ஓவியா்களை பாராட்டினா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட ஓவியா்கள் அந்தந்த பகுதிகளில் இதுபோன்ற கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு பிரசார ஓவியங்களை வரைந்து வருவதாகவும் ஓவியா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com