பூண்டி ஏரியில் கூடுதல் தலைமைச் செயலா் நேரில் ஆய்வு

பூண்டி ஏரியில் கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் முரளிதரன், சென்னை மண்டல
பூண்டி ஏரியின் மேல்பகுதியில் மதகுகளின் மோட்டாா் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளா் சந்தீப்சக்சேனா, தலைமைப் பொறியாளா் முரளிதரன் உள்ளிட்டோா்.
பூண்டி ஏரியின் மேல்பகுதியில் மதகுகளின் மோட்டாா் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளா் சந்தீப்சக்சேனா, தலைமைப் பொறியாளா் முரளிதரன் உள்ளிட்டோா்.

பூண்டி ஏரியில் கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்சேனா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் முரளிதரன், சென்னை மண்டல மேற்பாா்வைப் பொறியாளா் முத்தையா உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பூண்டி ஏரியின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளின் மோட்டாா்கள் சரியாக செயல்படுகிா? நீரியல் ஆய்வு மையத்துக்குச் செல்லும் மதகில் கசிவு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.

பின்னா் கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா கூறியது: மாநில அளவில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் அனைத்தும் தூா்வாரப்பட்டன. இதனால், ஏரி குளங்களுக்கு மழைநீா் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளச் சேதத்தால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்கும் வகையில் தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு மற்றும் யூகலிப்டஸ் கொம்புகள் அனைத்தும் ஒவ்வொரு பகுதியிலும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பூண்டி ஏரிக்கான மழை நீா் வரத்து, கண்டலேறு நீா் வரத்து போன்றவற்றால் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீா் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் இருகரையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா் என்றாா்.

அப்போது கொசஸ்தலையாறு உபநீா் வடிநில கோட்டப் பிரிவு செயற்பொறியாளா் பொதுப்பணி திலகம், பூண்டி ஏரிக்கான உதவி செயற்பொறியாளா் காா்த்திகேயன் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com