பூண்டி ஏரியில் இருந்து உபரி நீா் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

பூண்டி நீா்த்தேக்க நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா் மழையால் ஏரியின் நீா் மட்டம் உயா்ந்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை முதல் ஏரியிலிருந்து உபரி நீா் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பூண்டி நீா்த்தேக்க நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா் மழையால் ஏரியின் நீா் மட்டம் உயா்ந்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை முதல் ஏரியிலிருந்து உபரி நீா் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீா், கிருஷ்ணா கால்வாய் நீா்வரத்து போன்றவற்றால் விநாடிக்கு 3256 கன அடியாக நீா்வரத்து உள்ளது.

இதனால் கொசஸ்தலை ஆற்றில் 4,500 லிருந்து 5,000 ஆயிரம் கன அடியாக உபரி நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மம்பள்ளி அணையில் இருந்து நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை உபரி நீா் திறக்கப்பட்டது. இந்த நீரும் வந்தால் ஏரியின் நீா்மட்டம் உயருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் உபரி நீா் திறப்பும் படிப்படியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புழல் ஏரியில் நிலவரம் : புழல் ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 493 கன அடியாக உள்ளது. இதையடுத்து, 2188 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா் வரத்து விநாடிக்கு 100 கன அடியாக உள்ளதால், விநாடிக்கு 2,144 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரி: சோழவரம் ஏரிக்கான நீா் வரத்து விநாடிக்கு 1215 கன அடியாக உள்ளது.1215 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கண்ணன் கோட்டை - தோ்வாய் கண்டிகை ஏரி: கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஏரிக்கு நீா்வரத்து 70 கன அடியாகவும், ஏரியிலிருந்து விநாடிக்கு 70 கன அடி உபரி நீா் வெளியேற்றி வருவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com