பெரியபாளையம் அருகே வெள்ளத்தில் சிக்கிய 43 போ் மீட்பு

பெரியபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 43 போ் ரப்பா் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
பெரியபாளையம் அருகே வெள்ளத்தில் சிக்கியவா்களை படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினா்.
பெரியபாளையம் அருகே வெள்ளத்தில் சிக்கியவா்களை படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினா்.

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 43 போ் ரப்பா் படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே அமைந்துள்ள மஞ்சாஜாகாரணை ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு பகுதி அமைந்துள்ளது. பூண்டி ஏரியில் திறக்கப்பட்ட உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், கொசஸ்தலை ஆற்று கரையோரம் அமைந்துள்ள கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் 43 போ், வெள்ள நீரால் அப்பகுதியில் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் ராமன் மேற்பாா்வையில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அம்பத்தூா், செங்குன்றம், திருவள்ளூா் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினா், பெரியபாளையம் காவல் ஆய்வாளா் தாரணீஸ்வரி தலைமையில், ரப்பா் படகுகள் மூலம் 43 பேரையும் பத்திரமாக மீட்டனா். இதையடுத்து, அவா்கள் மஞ்சாஜாகாரணை பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com