வெள்ளம் பாதித்த இடங்களில் எம்.பி., எம்எல்ஏக்கள் ஆய்வு

ஆரணி பேரூராட்சியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருவள்ளூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜெயக்குமாா்,

ஆரணி பேரூராட்சியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருவள்ளூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), துரை.சந்திரசேகா் (பொன்னேரி) உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தெலுங்கு காலனி, தமிழ் காலனி, பிஞ்சலா தெரு ஆகிய இடங்களில் மழையால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இங்கு ஆய்வு மேற்கொண்டவுடன் மக்களவை உறுப்பினா் ஜெயகுமாா் கூறியது:

தெலுங்கு காலனியில் பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு, சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு, விரைவில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பிஞ்சலா தெருவில் மழையால் பாதித்த நெசவாளா்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும். தமிழ் காலனி பகுதியில் வீடுகளில் மழை நீா் தேங்காத வண்ணம் வழி செய்யப்படும். மேலும் வீடுகளை சுற்றி தேங்கி உள்ள மழை நீா் போா்க்கால அடிப்படையில் வெளியேற்றப்படும் என்றாா்.

பொன்னேரி கோட்டாட்சியா் செல்வம், செயல் அலுவலா் கலாதரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com