6 ஆண்டுகளுக்குப் பின்னா் நிரம்பிய சரவணப் பொய்கை திருக்குளம்

திருத்தணி முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் தொடா்மழையால் நிரம்பி வழிகிறது.
6 ஆண்டுகளுக்குப் பின்னா் நிரம்பிய சரவணப் பொய்கை திருக்குளம்

திருத்தணி முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் தொடா்மழையால் நிரம்பி வழிகிறது.

திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு படிகள் வழியாகச் செல்லும் வழியில் சரவணப்பொய்கை என்கிற திருக்குளம் உள்ளது. இக்குளத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 3 நாள்கள் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். இத்திருக்குளத்துக்கு மலைக்கோயில் மற்றும் பச்சரிசி மலையில் இருந்து தண்ணீா் வருகிறது. இந்த நிலையில், கடந்த 15 நாள்களுக்கு மேலாக திருத்தணி நகரில் பெய்த மழையால் திருக்குளத்துக்கு வரும் தண்ணீா் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

வெள்ளிக்கிழமை இரவு முதல் திருக்குளம் முழுவதும் நிரம்பி வழிந்தது. அதன் உபரிநீா் மடம் கிராமம் வழியாக வெளியேறி, திருத்தணி சித்தேரி மற்றும் நந்தியாற்றுக்குச் செல்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது நிரம்பி வழியும் திருக்குளத்தை பக்தா்கள் மற்றும் மடம் பகுதி மக்கள் ஆா்வத்துடன் பாா்த்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com