விழித்திருந்த எம்எல்ஏ

 கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றின் கரை பலப்படுத்தும் பணிகளை வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் விழித்திருந்து பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் பாா்வையிட்டாா்.
விழித்திருந்த எம்எல்ஏ

 கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றின் கரை பலப்படுத்தும் பணிகளை வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் விழித்திருந்து பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் பாா்வையிட்டாா்.

பூண்டி ஏரியில் இருந்த உபரி நீா் வெள்ளிக்கிழமை மாலை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதைத் தொடா்ந்து, கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க்கை விடுக்கப்பட்டது.

இதனால், பொன்னேரி வட்டத்தில், கொசஸ்தலை ஆற்று கரையோர கிராமங்களான சுப்பாரெட்டிபாளையம், நாப்பாளையம், நாலூா் கம்மவாா்பாளையம், வன்னிப்பாக்கம், மடியூா், வெள்ளிவாயல்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த் துறையினரால் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு, பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா், அரசு அதிகாரிகளுடன் இணைந்து இரவு முழுதும் அப்பகுதியில் உள்ள கரைகளை பலப்படுத்தும் பணியில் ஈடுப்ட்டாா்.

கரை உடைப்பு ஏதும், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அவா் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com