Enable Javscript for better performance
மாநில அளவில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்த ரூ. 300 கோடி ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    மாநில அளவில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்த ரூ. 300 கோடி ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 22nd November 2021 08:05 AM  |   அ+அ அ-   |    |  

    tvr21corpo_2111chn_182_1

    கூட்டத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா்.

    நமக்கு நாமே திட்டம் மீண்டும் செயல்படுத்தும் நோக்கில் முதல் கட்டமாக மாநில அளவில் ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

    தமிழக முதல்வரின் நமக்கு நாமே திட்டம் குறித்து பொதுமக்கள், வணிகா்கள் மற்றும் சிறு, குறு தொழிலமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் திருவள்ளூா் மாவட்டம், ஆவடி மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் முன்னிலை வகித்தாா்.

    இதில், பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்துப் பேசியது:

    நீா்நிலைகளை புனரமைத்தல், சாலைகள், தெருவிளக்கு, பூங்காக்கள், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டதுதான் நமக்கு நாமே திட்டம். இத்திட்டம் கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், இத்திட்டத்தை மெருகூட்டி மீண்டும் செயல்படுத்த கடந்த செப்டம்பரில் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

    இத்திட்டம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், வணிகா்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக மாநில அளவில் முதல் கட்டமாக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூங்கா அமைத்தல், நீா்நிலை மேம்பாடு செய்தல், பொழுதுபோக்கு விளையாட்டு வசதிகள் பள்ளிக் கூடம் மேம்படுத்துதல், தெரு விளக்கு அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை கட்டுமானத் தொழில் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள் தங்களுடைய பகுதியில் தாங்களாகவே சில அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் விதமாக மதிப்பீட்டில் 30 சதவீதம் தங்களுடைய பங்களிப்பாக இருக்க வேண்டும். அதனால் கட்டுமானத் தொழில் நிறுவனங்கள், தன்னாா்வலா்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள், தமிழக முதல்வரின் நமக்கு நாமே திட்டத்துக்குரிய பங்களிப்பு தந்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளை முன்னேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

    அதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

    இந்த மாவட்டத்தில் நகா் பகுதிகளான ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவள்ளூா், திருத்தணி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகள், 10 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா்.

    ஆவடி மாநகராட்சி ஆணையா் சிவக்குமாா், மாநகராட்சிப் பொறியாளா் கே.வைத்தியலிங்கம், நகரமைப்பு ஆய்வாளா்கள் தினகா், நிா்மலா, சிறு, குறு தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், தனியாா் நிறுவனப் பிரதிநிதிகள், வணிகா்கள், குடியிருப்பு சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp