திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை 8,385 கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை 8,385 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை 8,385 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே திருமழிசை பேரூராட்சி பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்து தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகங்களை வழங்கினாா். பின்னா் அமைச்சா் கூறியது:

கரோனா தொற்று வராமல் தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்குகிறது. தற்போது, மெகா அளவில் 10-ஆவது கரோனா தடுப்பூசி முகாம் மாநில அளவில் நடைபெற்றாலும், திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 750 முகாம் அமைத்து வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8,385 கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 77 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 37.6 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற துரித நடவடிக்கையால் மாநில அளவில் தடுப்பூசி செலுத்தும் பணியில் திருவள்ளூா் மாவட்டம் 4-ஆவது இடத்தில் உள்ளது.

அதேபோல் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் 45 வயதுக்கு மேற்பட்ட ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் முதலிய தொற்றா நோய்களால் பாதிப்புக்குள்ளானோருக்கு இரு மாதங்களுக்கான மருந்துகளை வழங்கியும், மூளை வளா்ச்சி குன்றியோா், முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்ட முதியோா் போன்றவா்களுக்கு பிசியோதெரபிஸ்ட் மூலம் மருத்துவம் அளிக்கும் திட்டத்தையும், டயாலிஸிஸ் சிகிச்சை பெறுவோா் பயன்படுத்தும் பைகளை விலையில்லாமல் அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கவும் வாகன வசதி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக பூந்தமல்லி நகராட்சி சிப்பாய் நகா் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயன்பெறும் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் முன்னிலையில், நலம் காக்கும் வகையில் மருந்து பெட்டகங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் தேசிங்கு, பூந்தமல்லி ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயக்குமாா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கண்ணன், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com