நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு

திருவள்ளூா் மேற்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் உள்ளவா்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மேற்கு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் உள்ளவா்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவள்ளூா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் எம். பூபதி தலைமை வகித்தாா். சட்டமன்ற உறுப்பினா்கள் திருத்தணி எஸ். சந்திரன், திருவள்ளூா் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருத்தணி நகரப் பொறுப்பாளா் வினோத்குமாா் வரவேற்றாா்.

இதில், அமைச்சா் ஆவடி சா.மு. நாசா் பங்கேற்று பேசினாா்.

இதனைத் தொடா்ந்து திருத்தணி, திருவள்ளூா், பள்ளிப்பட்டு, பொதட்டூா்பேட்டை ஆகியவற்றிற்கான நகர பேரூா் தோ்தலில் போட்டியிட 500 போ் விருப்ப மனுவை பெற்று சென்றுள்ளனா்.

நிா்வாகிகள் ஆா்.டி.இ. ஆதிசேஷன், ஓ. ஏ. நாகலிங்கம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் கடம்பத்தூா் திராவிட பக்தன், சிட்டி பாபு, கிளாம்பாக்கம் பன்னீா்செல்வம், கோதண்டம், வழக்குரைஞா் கிஷோா்ரெட்டி, பொதுக்குழு உறுப்பினா் வி. சி. ஆா். குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com