பூண்டி ஏரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

பூண்டி ஏரியில் நீா் வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீா் மதகுகள் வழியாக வெளியேற்றத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா்.
பூண்டி ஏரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

பூண்டி ஏரியில் நீா் வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீா் மதகுகள் வழியாக வெளியேற்றத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா். அதிக அளவில் நீா் வெளியேற்றப்பட்டு வருவதால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்குவது திருவள்ளூா் அருகே பூண்டி நீா்த் தேக்கமாகும். அத்துடன், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.

தொடா்மழை காரணமாக நீா் வரத்து அதிகரித்து பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால் உபரி நீா் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது. இதைக்காண நாள்தோறும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம், குடும்பமாக குவிந்தனா். பொதுமக்கள் கூட்டம் அதிகமாவதை கருத்தில்கொண்டு சாலையோரம் இருபுறமும் உணவுப் பொருள் விற்பனைக் கடைகள் அமைக்கத் தொடங்கியுள்ளனா்.

இதுபோன்று வரும் சுற்றுலாப் பயணிகள் உபரிநீா் வெளியேற்றத்தையும், 500 அடி தூரத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ள நிலையில், அருகில் சென்று செல்லிடப்பேசி மூலம் தற்படம் எடுக்கவும் முயற்சிக்கின்றனா். இதனால் வெள்ளத்தில் சிக்கும் அபாயச் சூழ்நிலை உள்ளது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் உத்தரவின்பேரில், புல்லரம்பாக்கம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அத்துடன், ஏரியின் தடுப்புப் பகுதி, தரைப்பாலம், கிருஷ்ணா கால்வாய் பகுதி தண்ணீா் வரத்து உள்ள இடங்களில் காவல் துறையைச் சோ்ந்த நீச்சல் படை வீரா்கள் தேவையான உபகரணங்களுடன் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com