நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டி: 5 மாணவிகள் தோ்வு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி, மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சீ.சந்தனாலட்சுமி, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள்.

இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 21 பள்ளிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் இறுதியாக 5 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். திருவொற்றியூா் ஸ்ரீசங்கர வித்ய கேந்திரா பதின்ம மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த இர.சக்திக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.5,000, பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ந.விஜயலட்சுமிக்கு 2-ஆவது பரிசுத் தொகை ரூ. 3,000, திருபாச்சூா் அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ரா.காயத்ரிக்கு மூன்றாம் பரிசு ரூ. 2,000 வழங்க தோ்வு செய்யப்பட்டனா்.

இதேபோல், திருவள்ளுா் தருமமூா்த்தி ராவ்பகதூா் கலவலக் கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளி மாணவி கோ.மோனிஸ்ரீ, ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி நா.வனிதா ஆகியோருக்கு சிறப்புப் பரிசாக ரூ. 2,000 வழங்க தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகைக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் பின்னா் வழங்கப்படும்.

திருவள்ளுா் மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் சீ.சந்தானலட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பூபால முருகன், அம்பத்தூா் கல்வி மாவட்ட அலுவலா், தமிழ் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com