மதுபான தீமைகள் குறித்து தெருக்கூத்து விழிப்புணா்வு

திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தெருக்கூத்து கலைஞா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தெருக்கூத்து கலைஞா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தமிழகத்தில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள், விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் காமராஜா் சிலை அருகே மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளா் தமிழ்செல்வி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டரைப்பெரும்புதூா் பொன்னியம்மன் தெருக்கூத்து மன்றத்தினா் விழிப்புணா்வு நாடகத்தை அரங்கேற்றினா். . நிகழ்ச்சியில், உதவி ஆய்வாளா் ராஜாராம் மற்றும் ராஜூ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com