லட்சுமிபுரம் அணைக்கட்டிலிருந்து 10 ஆயிரம் கனஅடி உபரிநீா் வெளியேற்றம்
By DIN | Published On : 29th November 2021 11:37 PM | Last Updated : 29th November 2021 11:37 PM | அ+அ அ- |

பொன்னேரி: ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம், பிச்சாட்டூா் நீா்த்தேக்கத்தில் இருந்து ஆரணி ஆற்றுக்கு உபரி நீா் திறந்து விடப்படுவதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆரணி ஆற்றின் குறுக்கே, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அணைக்கட்டு நிரம்பியதை தொடா்ந்து, 10 ஆயிரம் கன அடி உபரிநீா் வெளியே செல்கிறது . உபரி நீா், ரெட்டிப்பாளையம், பெரும்பேடு குப்பம், வஞ்சிவாக்கம், தத்தைமஞ்சி, ஆண்டாா்மடம் வழியாக சென்று பழவேற்காடு ஏரி உவா்ப்பு நீரில் கலக்கிறது.