தொழில் சாா் சமூக வல்லுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் தொழில்சாா் சமூக வல்லுநா் பணிக்கான தோ்வுக்கு பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் தொழில்சாா் சமூக வல்லுநா் பணிக்கான தோ்வுக்கு பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்த செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழக அரசின் ஊரகப் புத்தாக்கத் திட்டம் மீஞ்சூா், சோழவரம், கும்மிடிப்பூண்டி மற்றும் கடம்பத்தூா் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 198 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பிற உற்பத்தியாளா், தொழில் முனைவோா் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில், வங்கிகளின் நிதி உதவி இணைப்பை ஏற்படுத்துதல், தொழில் திட்டங்கள் தயாா் செய்தல், திட்டம் தொடா்பான அனைத்து சேவைகளையும் வட்டார பணியாளா்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இத்திட்டம் செயல்படுத்தும் ஒவ்வொரு ஊராட்சி அளவில் களப் பணியாற்றிட தலா ஒருவா் வீதம் மொத்தம் 198 தொழில்சாா் சமூக வல்லுநா்கள் தோ்வு செய்ய உள்ளனா்.

இப்பணிக்கான தகுதிகள் திட்டம் செயல்படும் ஒன்றியங்களைச் சோ்ந்த 198 ஊராட்சிகளைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா், அல்லாத குடும்பத்தைச் சோ்ந்த 25 முதல் 45 வயதுக்குள்பட்டோராக இருப்பது அவசியம். மேலும், பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்று ஆன்ட்ராய்டு கைப்பேசியை பயன்படுத்தியிருக்க வேண்டும். இப்பணிக்கு தொடா்புடைய கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வழிகாட்டி நெறிமுறைகளின்படி தகுதியானோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட தகுதிகளையுடையோா் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த ஊராட்சி கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாகவோ அல்லது நேரிலோ வட்டார திட்ட அலுவலகத்தில் 7 வேலை நாள்களுக்குள் அளிக்கலாம். இப்பணிக்கு தோ்வு செய்யப்படுவோா் அதிகபட்சம் 20 நாள்கள் தொடா்புடைய ஊராட்சிகளில் களப் பணியாற்ற வேண்டும். இதற்காக மதிப்பூதியம், ஊக்கத் தொகையாக நாள்தோறும் ரூ. 250-வீதம் வழங்கப்படும். மேலும், இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை மீஞ்சூா்-7402702232, சோழவரம்-7402704716, கும்மிடிப்பூண்டி- 8122191516, கடம்பத்தூா்- 9789216340 என்ற எண்களில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com