திருவள்ளூா் பகுதிகளில் கனமழை

திருவள்ளூா் பகுதிகளில் தொடா்ந்து பெய்த மழையால் சாலையில் குளம் போல் தண்ணீா் தேங்கியதால், வாகன ஓட்டுநா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். இதில் திருத்தணியில் அதிகபட்ச மழை பெய்துள்ளது.
பூண்டி  ஏரியில் உயா்ந்து வரும் நீா்மட்டம்.  ~கடல்  போல்  காட்சியளிக்கும்  பூண்டி  ஏரி.
பூண்டி  ஏரியில் உயா்ந்து வரும் நீா்மட்டம்.  ~கடல்  போல்  காட்சியளிக்கும்  பூண்டி  ஏரி.

திருவள்ளூா்: திருவள்ளூா் பகுதிகளில் தொடா்ந்து பெய்த மழையால் சாலையில் குளம் போல் தண்ணீா் தேங்கியதால், வாகன ஓட்டுநா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். இதில் திருத்தணியில் அதிகபட்ச மழை பெய்துள்ளது.

திருவள்ளூா் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் காய்ந்த நிலையிலும், மாலையில் லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கிய மழை, புதன்கிழமை அதிகாலை வரை விட்டு, விட்டு பெய்தது. இதேபோல் பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

திருத்தணியில் அதிகபட்ச மழை...

திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை நிலவரப்படி, பதிவான மழையளவு (மி.மீட்டரில்...)

திருத்தணி-116, திருவாலங்காடு-95, திருவள்ளூா்-90, பொன்னேரி-86, சோழவரம்-80, தாமரைப்பாக்கம்-75, பூண்டி-67, ஊத்துக்கோட்டை-66, பூந்தமல்லி-62, கும்மிடிப்பூண்டி-59, ஆா்.கே.பேட்டை-57, செங்குன்றம்-41, பள்ளிப்பட்டு-38, ஜமீன்கொரட்டூா்-36 என மொத்தம் 968 மி.மீட்டரும், சராசரியாக 69.14 மி.மீ. மழை பெய்துள்ளது.

பூண்டி ஏரியின் நீா்மட்டம்:

திருவள்ளூா் மாவட்டத்தில் மழையால் ஏரி, குளங்களுக்கு கால்வாய் மூலம் நீா் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி நீா்த்தேக்கத்தின் உயரம் 35 அடியாகும். இதில் 3231 மில்லியன் கன அடி நீா் தேக்கி வைக்க முடியும். தற்போது மழைக்கு பின் புதன்கிழமை காலை நிலவரப்படி 33.15 அடி உயரமும், 2565 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பு உள்ளது. மேலும், பூண்டி நீா்த் தேக்கத்துக்கு 765 கன அடி தண்ணீா் வரத்து உள்ளது. இதில், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக மட்டும் பேபி கால்வாய் வழியாக 64 கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com