திருவள்ளூா் மாவட்டத்தில் 10-இல் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

திருவள்ளூா் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 10) மெகா தடுப்பூசி முகாம் மூலம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 10) மெகா தடுப்பூசி முகாம் மூலம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் 18 லட்சத்து 88 ஆயிரத்து 300 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் தவணை தடுப்பூசி 12 லட்சத்து 39 ஆயிரத்து 39 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 4 லட்சத்து 36 ஆயிரத்து 301 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் தவணையில் 65.6, இரண்டாம் தவணையில் 23.1 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நநிலையில், மாவட்டத்தில் அக். 10-இல் நடைபெறவுள்ள தடுப்பூசி முகாமில் குறைந்தபட்சம் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவது இலக்காகும். இந்த தடுப்பூசி முகாம்கள் அவரவா் வசிப்பிடம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருவள்ளூரை கரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com