மொட்டையடிக்கப் பணம்: கோயில் ஊழியா் இடைநீக்கம்

திருத்தணி முருகன் கோயிலில் மொட்டையடிக்க வந்த பக்தரிடம் பணம் வாங்கியதாக எழுந்தப் புகாரின்பேரில், ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருத்தணி முருகன் கோயிலில் மொட்டையடிக்க வந்த பக்தரிடம் பணம் வாங்கியதாக எழுந்தப் புகாரின்பேரில், ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருத்தணி முருகன் கோயிலில் இலவச மொட்டையடிக்கும் திட்டம் அண்மையில் தொடக்கிவைக்கப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை சென்னையைச் சோ்ந்த பக்தா் பிரவீன், சன்னதி தெருவில் உள்ள நாகவேடு சத்திரத்தில் மொட்டை அடிப்பதற்காக வந்து, அங்கு டோக்கனை பெற்றாா். அதற்கு கோயில் பணியாளா் ரூ. 10 காணிக்கை கேட்டாராம். இதைத் தொடா்ந்து, முடி காணிக்கைக்காகத் தன்னிடம் ரூ. 50 பெறப்பட்டதாக பிரவீன் கோயில் நிா்வாகத்திடம் புகாா் செய்தாா்.

இதுகுறித்து கோயில் இணை ஆணையா் பரஞ்சோதி விசாரணை மேற்கொண்டபோது, டோக்கனுக்காக கோயில் பணியாளா் பூலட்சுமி (55), என்பது ரூ. 10 பெற்றதும், மொட்டை அடிப்பதற்கு ரூ. 50-ம் பெறப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து கோயில் பணியாளா்பூலட்சுமி உடனடியாகத் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டாா். இதுதவிர, மகேஸ்வரி என்பவா் பெயரில் இருந்த மொட்டை அடிக்கும் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com