ரூ. 1 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்களை மீஞ்சூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்களை மீஞ்சூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 2 கன்டெய்னா் லாரிகளில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மீஞ்சூா் காவல் எல்லைக்குள்பட்ட கவுண்டா்பாளையம் பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் 2 கன்டெய்னா் லாரிகளில் இருந்து மினி லாரிகளில் மூட்டைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. காவல் துறை குற்ற நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் சாகுல் ஹமீது தலைமையிலான தனிப்படை போலீஸாா், அந்த மூட்டைகளை சோதனை செய்தனா். அவை தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் சோதனையிட்டதில், 6 டன் குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, குட்கா புகையிலைப் பொருள்களுடன் இருந்த 2 கன்டெய்னா் லாரிகள், 2 சரக்கு லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

மேலும் புகையிலை பொருள்களைக் கடத்தி வந்த 2 பேரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com