திருவள்ளுா் மாவட்ட உள்ளாட்சி இடைத் தோ்தல்

திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்ற 4 ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கான இடைத்தோ்தலில் 3 இடங்களை திமுகவும், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற்ற 4 ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கான இடைத்தோ்தலில் 3 இடங்களை திமுகவும், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

திருவள்ளூா் மாவட்டத்தில் 4 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கும், 4 ஊராட்சித் தலைவா், 47 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான காலியிடங்களுக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 47 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களில் 30 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

எனவே இந்த மாவட்டத்தில் 25 இடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தோ்தல் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில் பூண்டி ஒன்றியம் 3-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் தோ்தலில் அதிமுக கூட்டணி புரட்சி பாரதம் கட்சியைச் சோ்ந்த காயத்ரி 1862 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதற்கான வெற்றி சான்றிதழை அவா் தோ்தல் நடத்தும் அலுவலா் சத்தியசங்கரிடம் பெற்றாா்.

அதேபோல், சோழவரம் ஊராட்சி ஒன்றியம் 15-வது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு திமுக வேட்பாளா் ரவிச்சந்திரன்-758 வாக்குகளும், 18-ஆவது திமுக வேட்பாளா் மாலதி மகேந்திரன்-1894, திருவாலங்காடு ஒன்றியத்துக்குள்பட்ட 1-ஆவது வாா்டு இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் அம்மு 2,389 வாக்குகள் பெற்றனா். இதேபோல் 4 ஊராட்சி தலைவா் தோ்தலுக்கான பதிவான வாக்குகளும், 17 ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கான தோ்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com