புற்றுநோய் விழிப்புணர்வு பெண்கள் கிரிக்கெட் நிறைவு: காவல் கண்காணிப்பாளர் பரிசளிப்பு

வெங்கல் அருகே புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 19 வயதுக்குள்பட்ட பெண்கள் பங்குபெறும் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்ததையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஞாயிற்றுக்கிழமை பரிசளித்தார். 
புற்றுநோய் விழிப்புணர்வு பெண்கள் கிரிக்கெட் நிறைவு: காவல் கண்காணிப்பாளர் பரிசளிப்பு


திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 19 வயதுக்குள்பட்ட பெண்கள் பங்குபெறும் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்ததையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஞாயிற்றுக்கிழமை பரிசளித்தார். 

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே அமைந்துள்ள மாநகரல் பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 19 வயதுக்குள்பட்ட பெண்கள் பங்குபெறும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 8 அணிகள் கலந்து கொண்டன. 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெற்றி பெற்ற அணிக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி கலை அரங்கத்தில் நடைபெற்றது.

அன்பு இல்லம் நிறுவனர் ஃபாதர் ஜோசப் லியோ அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அருண்குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பதக்கங்களையும் கோப்பையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

இந்த நிகழ்ச்சியில் மேக்னா கல்லூரியின் நிறுவனர் தேவதாஸ் நாயகம், டி என் கிரிக்கெட் லீகல் பிளேயர் ராஜாமணி, ஜெய் சூரி ராஜ், ரூபி தேவதாஸ் நாயகம், குருநாத் கல்லூரி முதல்வர் உமாதேவி, சமூக ஆர்வலர் ஆதி மதுசூதன், பார்மர் அசோக் லைலாண்ட் கேப்டன் சுதாகரன் உட்பட பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com