ஏடூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் திறப்பு

ஏடூரில் மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை விவசாயிகள் பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிஜய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்.


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூரில் மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை விவசாயிகள் பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிஜய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிஜய் உழவர் உற்பத்தியாளர் நிறுவன திறப்பு விழாவில் நிறுவனர் ஹரீஷ்குமார் தலைமை தாங்கி வரவேற்றார்.

நிகழ்வில் பொது சேவை மைய மாவட்ட பொது மேலாளர் வி.கோபிநாத், மாவட்ட பொது சேவை மைய கிராமப்புற தொழில்முனைவோர் சங்க தலைவர் கணபதி முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வில் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் எம்.எல்.ரவி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், ஏடூர் ஊராட்சி தலைவர் ரேவதி அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த நிஜய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் அனைத்து விதைகள்,உரங்கள் மானிய விலையில் வாங்க முடியும், விவசாயிகளின் விளைபொருள்களை நேரடியாக சந்தைபடுத்தப்படும், விவசாயத்திற்கு பயன்படும் இயந்திரங்கள் குறைந்த விலைக்கு வாடகைக்கு தரப்படும், வல்லுநர்களை கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் தரப்படும்.

மேலும் விவசாயிகளுக்கு கடன் உதவி ,பயிர் காப்பீடு செய்து தரப்படும் என்று நிகழ்வில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் ஹரீஷ்குமார் தெரிவித்தார்.

மேலும் இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தோடு, இ-சேவை மையமும் செயல்படுவதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல், வாக்காளர் அடையாள அட்டை பெறுதல், மருத்துவ காப்பீடு அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவைகளை செய்ய முடியும் என்பதோடு, நிஜய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிப்பதோடு, முதியோர் கல்வியும் நடத்தப்படும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com