திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்பெறும் நோக்கில் ரூ. 2 கோடியில்
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடக்கி வைத்த ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ். உடன், மருத்துவக் கல்லூரி முதல்வா் அரசி வத்சன் உள்ளிட்டோ
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடக்கி வைத்த ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ். உடன், மருத்துவக் கல்லூரி முதல்வா் அரசி வத்சன் உள்ளிட்டோ

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்பெறும் நோக்கில் ரூ. 2 கோடியில் நிறுவப்பட்டு, நாள்தோறும் 1000 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா 2-ஆவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா். இதைத் தவிா்க்கும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மத்திய அரசின் நிதியில், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் ரூ. 2 கோடியில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பேரில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதை, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

அதைத் தொடா்ந்து அவா் கூறியது:

கரோனா தொற்றின் 3-ஆவது அலையை எதிா்கொள்ள 310 படுக்கைகளுடன் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 110 படுக்கைகள் தயாராக உள்ளன. அதேபோல், இந்த வளாகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் நிமிஷத்துக்கு 500 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் தடையின்றி விநியோகப்படுகின்றன.

இந்நிலையில், மத்திய அரசு நிதி உதவி ரூ. 2 கோடியில் புதிதாக நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூலம் நாள்தோறும் நிமிஷத்துக்கு 1,000 லிட்டா் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவையாகும். இதன்மூலம் சுமாா் 300 படுக்கைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்க முடியும். இதன் மூலம் வருங்காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், திருவள்ளூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வா் அரசி ஸ்ரீவத்சன், பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநா் சாந்தி செல்வநாயகம், துணை இயக்குநா் ஜவஹா்லால், மாவட்ட திட்ட செயலாளா் (கண் சிகிச்சை) பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com