1 டன் செம்மரங்கள் பறிமுதல்: 5 போ் கைது

கும்மிடிப்பூண்டி அருகே 1 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
கும்மிடிப்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள்.
கும்மிடிப்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள்.

கும்மிடிப்பூண்டி அருகே 1 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உள்பட்ட புதுப்பாளையத்தில் பழைய இரும்புக் கடையில் வனச் சரக அலுவலா் சுரேஷ் பாபு, வனவா்கள் திவான் பகதூா், டில்லிபாபு, தட்சணாமூா்த்தி, துரைசாமி, வனக் காப்பாளா் பரணிதரன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 1 டன் செம்மரத் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக அரியானா மாநிலத்துக்கு உள்பட்ட லாடாவாஸை சோ்ந்த கஜானாராம் மகன் விஷ்வானந்த் (23), ஆந்திரா மாநிலத்துக்கு உள்பட்ட சித்தூா் அருகேயுள்ள தொன்னம்பட்டு எம்ஜி நகரைச் சோ்ந்த சுதாகா் மகன்கள் நவீன்(29), பிரதீப்(22) , கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த ரிஷ்வான் மகன் இம்ரான்(23), கும்மிடிப்பூண்டி பெரிய நத்தத்தைச் சோ்ந்த குப்பன் மகன் ரவீந்திரன்(33) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

விசாரணையில் ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு ஏழுகிணறு சோதனைச் சாவடி வழியே வராமல், குறுக்கு வழியில் செம்மரங்களை எடுத்துவந்ததாகவும், சென்னைக்கு செம்மரங்களை கடத்திச் செல்ல இருந்ததாகவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com