கும்மிடிப்பூண்டியில் 200 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் 

மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, மூன்று வேளாண் சட்டங்களை தடை செய்ய மறுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசின் போக்கை கண்டித்து திமுக தலைமை உத்தரவின் பேரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டியில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் அவரவர் வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, நாட்டில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுதுறை நிறுவனங்களை விற்பது, நீட் தேர்வை ரத்துசெய்ய மறுப்பது போன்ற விவகாரங்களில் மத்திய அரசின் போக்கை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கருப்பு கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
நிகழ்வில் திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர் வெற்றி, மாதர்பாக்கம் ஊராட்சி தலைவர் சீனிவாசன், தயாளன் உள்ளிட்ட திரளான திமுகவினர் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். அவ்வாறே கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கத்தில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு கொடி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன், பாசம் அன்பு, ஜெயந்தி கெஜா, மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் கு.ஜோதிலிங்கம், தொண்டரணி நிர்வாகி முத்துகுமார், பூவலம்பேடு ஊராட்சி செயலாளர் சசிகுமார், லோகேஷ், ஞானம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். 

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் திமுக ஒன்றிய செயலாளர் மணிபாலன் தலைமையிலும், மாநெள்ளூரில் பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் தலைமையிலும், ஊராட்சி தலைவர் லாரன்ஸ் முன்னிலையிலும், கீழ்முதலம்பேட்டில் ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் தலைமையிலும், நேமள்ளூரில் மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி மனோகரன் தலைமையிலும், காமராஜ் முன்னிலையிலும், பூவலம்பேட்டில் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் வெங்கடாசலபதி தலைமையிலும், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அரவிந்தன் முன்னிலையிலும் திமுகவினர் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com