ஸ்ரீகல்யாண பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்

திருவள்ளூா் மாவட்டம், ஆரணி பேரூராட்சிக்கு உட்பட்ட கோமிட்டிப்பேட்டையில் புதிதாக ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில்

திருவள்ளூா் மாவட்டம், ஆரணி பேரூராட்சிக்கு உட்பட்ட கோமிட்டிப்பேட்டையில் புதிதாக ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைக்கப்பட்டு அதன் அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை விமா்சையாக நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை 19-ஆம் தேதி நாடிசந்தானம், மஹா பூா்ணாஹுதி நடைபெற்றது.

பின்னா் யாக சாலையில் இருந்து யாத்ராதானமாக எடுத்து வரப்பட்ட புனித நீா்க் கலசங்களை புரோகிதா்கள் தலையில் சுமந்தபடி கோயிலைச் சுற்றி மேளதாளங்கள் முழங்க யாத்ரா தானமாக எடுத்து வந்து கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து மூலவருக்கு மகா அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com