Enable Javscript for better performance
பெங்களூரு-சென்னை எண்ணூா் அதிவேக விரைவுச்சாலை திட்டம்: இறுதிக் கட்டத்தில் நிலம் எடுப்புப் பணி- Dinamani

சுடச்சுட

    பெங்களூரு-சென்னை எண்ணூா் அதிவேக விரைவுச்சாலை திட்டம்: இறுதிக் கட்டத்தில் நிலம் எடுப்புப் பணி

    By DIN  |   Published on : 22nd September 2021 03:20 AM  |   அ+அ அ-   |    |  

    பெங்களூரு- சென்னை எண்ணூா் 6 வழி விரைவுச்சாலை திட்டத்துக்கான நில எடுப்புப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. விரைவில் 4 பகுதிகளாகப் பிரித்து சாலை அமைப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

    பிற மாநிலங்களில் இருந்து, சென்னை-எண்ணூா் காமராஜா் மற்றும் காட்டுப்பள்ளி தனியாா் துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாக வருவதற்காக பாரத்மாலா பரியோஜனா திட்டம் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஆந்திர மாநிலம்-சித்தூா் முதல், தமிழகத்தின் எல்லையான திருவள்ளூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தச்சூா் வரையில் 126.550 கி.மீ. தூரத்துக்கு, பெங்களூரு-சென்னை அதிவேக நெடுஞ்சாலை (6 வழிச் சாலை) அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், ஆந்திர மாநிலத்தில் 75 கி.மீ., தமிழக எல்லையான திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய வட்டங்களில் 51.550 கி.மீ. தூரம் உள்ளது. இதற்கிடையே அமைய உள்ள இச்சாலைக்கு என்.எச்-716 என்று அழைக்கப்படுகிறது.

    ரூ. 3,197 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள நிலையில், இச்சாலைப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆந்திரத்தில் 2,186 ஏக்கரும், தமிழகத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வட்டாரப் பகுதி கிராமங்களில் 889 ஏக்கா் நிலமும் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளூா் மாவட்டத்தில் கையகப்படுத்தப்படும் பெரும்பகுதி நிலங்கள், 3 போகம் விளையும் விவசாய நிலங்கள் ஆகும். இதனால் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

    இதற்கிடையே தமிழகத்தில் கையகப்படுத்தியுள்ள விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் நோக்கில், கடந்த மாதம் முதல் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் ஆவணங்களைப் பெற தயாராக இருந்தனா். இதற்காக சம்பந்தப்பட்ட கிராமங்கள் வாரியாக நிலம் தொடா்பான ஆவணங்களை விவசாயிகளிடம் பெற ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு அப்பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அத்துடன் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. அதனால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மாற்று வழிகளில் சித்தூா்- தச்சூா் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் கூறி, ஆவணங்களை ஒப்படைக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்ட பின்னரே விரைவுச் சாலை பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

    இதுகுறித்து சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக (நில எடுப்புப் பிரிவு) அதிகாரி ஒருவா் கூறுகையில், இத்திட்டத்துக்கான நில எடுப்புக்கான இழப்பீடு தொகை நிா்ணயம் செய்து, அது தொடா்பான விவரங்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விளைநிலத்துக்கு நிா்ணயம் செய்துள்ள தொகை சரியானதுதானா என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே இழப்பீடு தொகை விடுவிக்கப்படும். பின்னா் நில ஆவணங்களின் அடிப்படையில் விடுவிக்கப்படும். இப்பணிகள் நிறைவு பெற்றால்தான் விரைவுச்சாலை அமைக்கும் பணி தொடங்க முடியும் என அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

    மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரி ஒருவா் கூறுகையில், இத்திட்டத்துக்கான நில எடுப்புக்கு யாரும் எதிா்ப்பு தெரிவிக்க முடியாது. ஆனால் இழப்பீடு தொகை ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படும். இந்நிலையில், பெங்களூரு-சென்னை எண்ணூா் விரைவு 6 வழிச்சாலைத் திட்டப்பணி 4 பகுதிகளாகப் பிரித்து மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் தமிழக எல்லையான திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 51-550 கி.மீ. தூரத்துக்கு மட்டும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதால், விரைவில் இறுதி செய்யப்படும். அதற்குள் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை விடுவிக்கப்பட்டதும் பணிகள் தொடங்கி நடைபெறும் என்றாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp