திருத்தணியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

நிறைமாத கர்ப்பிணி பெண்கள் நல்ல சிந்தனைகளோடு சந்தோஷத்துடன் குழந்தையை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என திருத்தணியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் 
திருத்தணியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
திருத்தணியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.

நிறைமாத கர்ப்பிணி பெண்கள் நல்ல சிந்தனைகளோடு சந்தோஷத்துடன் குழந்தையை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என திருத்தணியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் வாழ்த்தினார்.

திருத்தணி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம், 100 கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திருத்தணியில் தனியார் மண்டபதில் இன்று நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தார். திருத்தணி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திவ்யஸ்ரீ வரவேற்றார். இதில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் பங்கேற்று கர்ப்பணி பெண்களை வாழ்த்தி பேசியதாவது: கருவிலிருக்கும் குழந்தைக்காக தாய்மார்கள் பல கட்டுப்பாடுகள் ஏற்படுத்தி கொண்டு தியாகம் செய்கின்றனர்.

கருவில் குழந்தை வளரும் போதே, அவர்களை வளர்க்க வேண்டும் என நல்ல சிந்தனை களோடு சந்தோஷமாக இருந்து குழந்தையை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும். தலைப்பிரசவம் என்பது இரு உயிர்களின் போராட்டம் ஆகும். குழந்தை பிறந்தவுடன், ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்பால் கொடுத்தால் தான் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ். சந்திரன் கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மலர் மாலை அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மதியம் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவர் செந்தமிழ் முரசு, சுகாதார மேற்பார்வையாளர் சம்பத்,  திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் வட்டார கல்வி அலுவலர்கள், பாபு, வெங்கடேஸ்வரலு, முன்னாள் கவுன்சிலர் அப்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com