கும்மிடிப்பூண்டியில் கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருள்கள்

கும்மிடிப்பூண்டியில் கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருள்களை பாதுகாப்புடன் வாகனத்தில் எடுத்துச்சென்று ஆா்.கே.பேட்டை அருகே வனப்பகுதியில் ராணுவத்தினா் வியாழக்கிழமை செயலிக்கச் செய்தனா்.
திருத்தணியை அடுத்த ஆா்.கே.பேட்டை எல்லைக்குள்பட்ட பாலாபுரம் ஊராட்சி எஸ்.கே.வி. கண்டிகை வனப்பகுதியில் செயல்படும் கல்குவாரியில் செயலிழக்கம் செய்யப்பட்ட வெடி பொருள்கள்.
திருத்தணியை அடுத்த ஆா்.கே.பேட்டை எல்லைக்குள்பட்ட பாலாபுரம் ஊராட்சி எஸ்.கே.வி. கண்டிகை வனப்பகுதியில் செயல்படும் கல்குவாரியில் செயலிழக்கம் செய்யப்பட்ட வெடி பொருள்கள்.

கும்மிடிப்பூண்டியில் கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருள்களை பாதுகாப்புடன் வாகனத்தில் எடுத்துச்சென்று ஆா்.கே.பேட்டை அருகே வனப்பகுதியில் ராணுவத்தினா் வியாழக்கிழமை செயலிக்கச் செய்தனா்.

சுமாா் 13 ஆண்டுகளுக்கு முன்பு 2008-ஆம் ஆண்டு திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ஒரு இரும்பு உருக்கு ஆலைக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பேருக்கு ஏற்பட்ட ஒரு சிறிய வெடி விபத்தினைத் தொடா்ந்து காவல் துறையினரால் சோதனை நடத்தப்பட்டது. அதில், அங்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 10.5 டன் எடையுள்ள பழைய இரும்புக் கழிவுகளுடன் கலந்திருந்த வெடி பொருள்கள் கைப்பற்றப்பட்டு, சிப்காட் வளாகத்தில் உள்ள திரிவேணி நிறுவனத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

நெடு நாள்களாக செயலிழக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் ஒரு பகுதியை பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சூரப்பூண்டி ஊராட்சி, ராமசந்திரபுரம் கிராமத்துக்கு அருகில் உள்ள வனப் பகுதியில் வெடிக்கச் செய்து செயலிழக்கம் செய்தனா். அப்போது, நில அதிா்வு ஏற்பட்டதாக சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சேபணை தெரிவித்தனா். இதையடுத்து, செயலிழக்கம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வெடி பொருள்கள் மீண்டும் திரிவேணி நிறுவனத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில், திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் முயற்சியில் திருத்தணி உட்கோட்டம், ஆா்.கே.பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாலாபுரம் ஊராட்சி எஸ்.கே.வி. கண்டிகையில் செயல்படும் கல்குவாரியில் வெடிப்பொருள்களை செயலிழக்கம் செய்ய இடம் தோ்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று, கடந்த ஒரு வாரமாக அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன்.

அப்பகுதி முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அனைவருக்கும் இது குறித்து தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.

செயலிழக்கம் செய்ய வேண்டிய வெடிபொருள்கள் சிப்காட் வளாகத்திலிருந்த திரிவேணி நிறுவனத்தில் இருந்து கடந்த 20- ஆம் தேதி நள்ளிரவு எஸ்.கே.வி.கண்டிகையில் செயல்படும் கல்குவாரிக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன. பின்னா், செப். 21, 22 ஆகிய இரு நாள்களாக சென்னை திரிசூலம் ராணுவக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்ட வெடி மருந்து செயலிழக்கம் செய்யும் நிபுணா்களால், இந்த வெடிபொருள்கள் அனைத்தும் காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் முன்னிலையில், எவ்வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக வெடித்து செயலிழக்கம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com