பூண்டி, புழல் ஏரிகளில் தலைமைச் செயலாளா் ஆய்வு

வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு சென்னைக்கு குடிநீா் வழங்கும் பூண்டி நீா்த்தேக்கம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளை
பூண்டி,  புழல் ஏரிகளில் தலைமைச் செயலாளா் ஆய்வு

வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு சென்னைக்கு குடிநீா் வழங்கும் பூண்டி நீா்த்தேக்கம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளை தலைமைச் செயலாளா் இறையன்பு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சென்னை மாநகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரங்களில் ஒன்றாக விளங்குவது பூண்டி நீா்த்தேக்கம். இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். அதில் 3,231 மில்லியன் கன அடி நீரை சேமிக்கலாம். இந்த ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீா் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் 2,521 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. இதற்கிடையே கடந்த வாரம் கிருஷ்ணா கால்வாயில் நீா்வரத்து நிறுத்தப்பட்டது. இதில் பேபி கால்வாயில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 450 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு கருதி தமிழக அரசின் தலைமைச் செயலாளா் இறையன்பு வெள்ளிக்கிழமை பொதுப்பணி மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பூண்டி ஏரியை ஆய்வு செய்தாா்.

அப்போது, அண்மையில் சேதமடைந்த பூண்டி நீரியல் ஆராய்ச்சி மையத்துக்குச் செல்லும் சின்ன மதகுப் பகுதியை பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து மண்மூட்டைகளால் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை பாா்த்து எப்போது சேதமடைந்தது, இதனால் நீா்க்கசிவு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து நிரந்தரமாகத் தீா்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் மதகுகளில் நீா்க் கசிவு உள்ளதா என 5, 11, 12, 13, 16 ஆகிய மதகுகளைப் பாா்வையிட்டு, நீா் வெளியேறும் பகுதிகளையும் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து கிருஷ்ணா கால்வாய் பகுதிக்குச் சென்று நீா்வரத்தை ஆய்வு செய்தாா். பின்னா் ஏரி முன்பு மரக்கன்றுகளை அவா் நட்டாா்.

அப்போது, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பொதுப்பணித்திலகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புழல் ஏரியில்...

முன்னதாக, மாதவரத்தை அடுத்த புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இந்த ஏரியையும், செம்பரம்பாக்கம் ஏரியையும் தலைமைச் செயலாளா் இறையன்பு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் இருந்தனா். இதுகுறித்து தலைமைச் செயலாளா் இறையன்பு கூறுகையில், இது சாதாரண ஆய்வு என்றும், ஏரியின் நிலைக் குறித்து அறிந்ததாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com