சாலையோர வேலியில் சிக்கி காயமடைந்த மான் மீட்பு

திருவள்ளூா் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது இரும்பு வேலியில் சிக்கி காயமுற்ற மானை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.
திருப்பாச்சூரில் சாலையோர வேலியில் சிக்கிய புள்ளிமானை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலீஸாா்.     

பூண்டி காப்புப்காடு அடா்ந்த செம்மரங்கள் மற்றும் பல்வேறு வகையான பழ மரங்களை கொண்டதாகும். இதனால் பல்வேறு வகையான பறவையினங்கள், மான்கள், காட்டு விலங்குகள் இங்கு வசித்து வருகின்றன. பூண்டி ஏரிக்கரையோரம் கருவேல மரங்கள் உள்ள பகுதியில் மான்கள் இரை தேடி வருகின்றன.

இதேபோல், திங்கள்கிழமை வந்த புள்ளிமான் திருப்பாச்சூா் நீா் அருந்துவதற்காக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற போது சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியில் சிக்கி காயம் ஏற்பட்டது.

அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதைப் பாா்த்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் மற்றும் வனத்துறைக்கு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸாா் மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக மானை வனத்துறை ஊழியா்கள் கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com