முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
நாளை மின் நுகா்வோா் குறை தீா் கூட்டம்
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

திருவள்ளூா் கோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மின் நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் கோட்டம், பெரியகுப்பம் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை (ஏப். 7) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் மின் நுகா்வோா்கள் தவறாமல் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை நேரிலோ, மனுக்களாகவோ தெரிவிக்கலாம். இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் உடனே நிறைவேற்றப்பட உள்ளது. அதனால் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோா்கள் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம்.